தசாவதாரம் படப்பிடிப்பு நடந்த இடத்துக்குச் சென்ற நடிகர் விஜய், கமல்ஹாசன் போடும் பத்து வேடங்கள் குறித்து அவரிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தாராம்.
இதுவரை இல்லாத அளவுக்கு 10 வேடங்களில் கமல் தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறார். எட்டு வேடங்களை படம் பிடித்து முடித்து விட்ட நிலையில் மீதம் உள்ள முக்கியமான இரு வேடங்களுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த வேடங்களைப் போட வெகு நேரம் ஆவதால் தினசரி ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிகிறதாம். ரஜினியின் சிவாஜி படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பைப் போல தசாவதாரத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென ஏவி.எம். ஸ்டுடியோவுக்குச் சென்ற ரஜினி, அங்கு படப்பிடிப்பில் இருந்த கமலை சந்தித்து பத்து அவதாரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதை விட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வித்தியாசமான கெட்டப்பில் இருந்த கமல், ரஜினியை வரவேற்றபோது ரஜினிக்கு சுத்தமாக கமலை அடையாளம் தெரியவில்லையாம்.
இந்த நிலையில் இப்போது விஜய்யும், கமல்ஹாசனின் கெட்டப்புகள் குறித்து கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு நேற்று தசாவதாரம் படப்பிடிப்புத் தளத்திற்குப் போய் கமலைச் சந்தித்தார்.
என்னென்ன வேடம் போட்டு அசத்துகிறார் என்று கமலிடம் ஆர்வமாக கேட்டாராம் விஜய். கமலும் பொறுமையாக விளக்கியுள்ளார். அவர் சொல்லச் சொல்ல விஜய்க்கு வியர்த்துப் போய் விட்டதாம். சத்தியமாக இப்படியெல்லாம் நடிக்க இன்னொரு நடிகர் பிறந்துதான் வர வேண்டும் என்று கூறி விட்டு ஆச்சரியம் மாறாத முகத்துடன் திரும்பினாராம்.
ரஜினியை எல்லா வழியிலும் ஃபாலோ செய்து வரும் விஜய், இப்போது அவரைப் போலவே கமலையும் சந்தித்துப் பேசியதை திரையுலகினர் குசுகுசவென பேசி வருகின்றனர்.
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
0 comments:
Post a Comment